மேலும் செய்திகள்
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
18-Jan-2025
குன்னுார், ;குன்னுார் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 36வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக 'டிரைவிங்' இன்ஸ்பெக்டர்' சிவக்குமார் தலைமையில், டிராபிக் இன்ஸ்பெக்டர் முருகைய்யா, பயிற்சி டிரைவர்கள் விஜயகுமார், லோகநாதன் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குன்னூர் சிறப்பு எஸ்.ஐ., ராஜூ முன்னிலை வகித்தார்.'சாலை பாதுகாப்பு மற்றும் வாகன பாதுகாப்பு சட்டங்களை முறையாக கடைபிடித்தல்,' உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் குறித்து மக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில், பங்கேற்ற ஆட்டோ, மினிபஸ், கார் டிரைவர்கள் மற்றும் பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
18-Jan-2025