| ADDED : ஜன 02, 2026 06:13 AM
ஊட்டி: ஊட்டியில் சாலை பாதுகாப்பு குறித்து, துண்டு பிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, ஊட்டி மத்திய பஸ் நிலையம் பகுதியில், நேற்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர் டிரைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதில், 'வாகன விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க, 'சீட் பெல்ட்' அணிவது; சாலை குறியீடுகளையும், விதிகளையும் மதிப்பது; வேகத்தை தவிர்ப்பது; வாகன இயக்கத்தின் போது டிரைவர்கள் மொபைல் போனை தவிர்ப்பது; இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது; மது அருந்திவிட்டு வாகனங்களை இயக் கக்கூடாது,' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து ஆய்வாளர் குணசேகரன் உட்பட, பலர் பங்கேற்றனர். இந்த மாதம் முழுவதும், ரத்த தானம், கண் தானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக, மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.