மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
02-Oct-2025
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
02-Oct-2025
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
02-Oct-2025
கோத்தகிரி;கோத்தகிரி தட்டப்பள்ளம் பகுதியில் சாலையோரத்தில் பாறை சரிந்துள்ளதால், இரவு வாகனம் இயக்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கோத்தகிரி -மேட்டுப்பாளையம் சாலை, போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. சாலை, நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தேவையான இடங்களில் ஆபத்தான பாறைகள் அகற்றப்படாமல் உள்ளது. இந்த பாறைகள் விழும்பட்சத்தில், போக்குவரத்து பாதிப்பதுடன், ஆபத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில், கோத்தகிரி பகுதியில் பெய்த மழையில் சாலையோர திட்டுகளில் ஈரம் அதிகரித்துள்ளது. பாறைகளில் தொடர்ந்து தண்ணீர் கசிந்து வருகிறது. நேற்று முன்தினம், தட்டப்பள்ளம் பகுதியில் சாலையோர பாறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.குறிப்பிட்ட நேரத்தில் வாகன போக்குவரத்து இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மழை தொடரும் பட்சத்தில், எஞ்சி நிற்கும் பாறையும் விழும் அபாயம் உள்ளது. இரவில் வாகன இயக்கத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்த பாறைபை அகற்றுவதுடன், குறிப்பிட்ட இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
02-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025