உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிவகுப்பு ஊர்வலம்

ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிவகுப்பு ஊர்வலம்

ஊட்டி: ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில், விஜயதசமி பெருவிழா சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., 101 வது தொடக்க விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், தென் மாநில அமைப்பாளர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக, சென்ற ஊர்வலத்தில், சமூக நல்லிணக்கம், குடும்ப விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, ஏ.டி.சி., திடலில், பொதுக்கூட்டம் நடந்தது. இதில், ஆர். எஸ்.எஸ்., மாவட்ட, வட்டார மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை