உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  நீலகிரி முழுவதும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி; சாய் அறக்கட்டளை முடிவு

 நீலகிரி முழுவதும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி; சாய் அறக்கட்டளை முடிவு

குன்னுார்: குன்னுார் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் உள்ள 'டிபன்ஸ் எம்ப்ளாயீஸ் மெட்ரிக் (டெம்ஸ்) பள்ளியில், சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, உபதலை சாய் நிவாசின் சாய் மாருதி சேவா அறக்கட்டளை சார்பில், திருக் குறள் ஒப்புவித்தல் போட்டி, 2 நாட்கள் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் தாரா ரமேஷ் தலைமை வகித்தார். போட்டியை துவக்கி வைத்த சாய் நிவாஸ் சுவாமி குரு மேகநாத் பேசுகையில்,''திருக்குறள் மனித குலத்திற்கு கிடைத்த மிக உயர்ந்த ஞானத்தின் ஆதாரம். இந்த போதனைகள், ஒவ்வொருவரின் வாழ்விலும் வழிகாட்டியாக கொண்டு வர வேண்டியது அவசியம். மனித பிறவியின் உண்மையான குறிக்கோள் அனைத்து உயிர்களையும் நேசித்து சேவை செய்வதாகும். திருக் குறளின் ஞானம், மனித மதிப்புகளை தெய்வீக நற்குணங்களாக மாற்றுகிறது. நேசம், சேவை ஆகியவை திருக்குறளின் ஞானத்தின் வழியாக நாட்டையும் உலகையும் உயர்த்துவதற்கான வாய்ப்பு. வளரும் குழந்தைகள் முதல் மூத்தோர் வரை நற்பண்புகளை வளர்க்கும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் நடத்தப்படும்,'' என்றார். நடுவர்களாக தமிழறிஞர்கள் ஹாலன், ராஜ் பெட்டா, நந்தகுமார் துரைராஜ், சரவணன், ராஜகோபால், அமுதவல்லி, ஷாலினி, சூரியகலா உமாமகேஸ்வரி பங்கேற்றனர். மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. துணை தலைவர் சுனிதா உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை