உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  காரம் நிறைந்த ஊட்டி பூண்டு; பனிக்கால சாகுபடி பணி தீவிரம்

 காரம் நிறைந்த ஊட்டி பூண்டு; பனிக்கால சாகுபடி பணி தீவிரம்

குன்னுார்: குன்னுார் கேத்தி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனிக்காலத்தில் காரம் நிறைந்த பூண்டு உற்பத்திக்கான பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில், உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட் உட்பட மலை காய்கறிகள் விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. அதில், ஊட்டி, குன்னுார், குந்தா உட்பட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் பூண்டு விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் மார்ச் மற்றும் நவ., மாதங்களில் பூண்டு அதிகளவில் விதைக்கப்படுகிறது. கடந்த நவ., மாதம் இறுதியில் இருந்து தொடர்ந்து, பூண்டு விதைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக கேத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் பூண்டு விதைக்கும் பணி காலை நேரங்களில் நடந்து வருகிறது. விவசாயிகள் கூறுகையில், 'நீலகிரியில் பனிகாலத்தில் விதைக்கப்பட்டு விளையும் பூண்டு, காரம் மற்றும் தரம் நிறைந்ததாக உற்பத்தியாகும். இவை மகாராஷ்டிரா உட்பட வட மாநிலங்களில் விதைகளுக்காக அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். தற்போது நடக்கும் ஏலங்களில் போதிய விலை கிடைப்பதில்லை. வரும் சீசனில் இவற்றின் விலை அதிகரிக்கும் என்று நம்பிக்கையில் விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ