உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளி ஆண்டு விழா ஊர்வலம் -ஒற்றுமையை வலியுறுத்திய மாணவர்கள்

பள்ளி ஆண்டு விழா ஊர்வலம் -ஒற்றுமையை வலியுறுத்திய மாணவர்கள்

பந்தலுார்; பந்தலுார் அருகே பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா ஊர்வலம் நடந்தது. பி.டி.ஏ. தலைவர் ஸ்ரீஜேஸ் தலைமையில் கொடியேற்றப்பட்டது. மாணவர்களின் 'டிரில்' நிகழ்ச்சி நடந்தது. பள்ளி ஆண்டு விழா குறித்து, ஊர் பொதுமக்கள் மத்தியில் தெரிவிக்கும் வகையில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக, மூன்று மத பெரியவர்களின் வேடமணிந்த மாணவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். பெற்றோர் தாலத்தட்டு எடுத்து வந்தனர். இதில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மினி, நிர்வாகிகள் அஸ்ரப், அனீஸ் ஜோசப், இந்திரா காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !