| ADDED : ஜன 14, 2024 11:09 PM
ஊட்டி:ஊட்டி, டி.ஆர்., பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் 'ஒளிரும் பள்ளி மிளிரும் பள்ளி' மூன்று நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா ஜெனிபர் தலைமையில், மேலாண்மை குழு உறுப்பினர் குஷ்பு முன்னிலையில், ஆசிரியர்கள்,ஊர் பொதுமக்கள்,இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்,நடுவட்டம் பேரூராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.பின், பள்ளியின் சுற்றுசுவர்களுக்கு வண்ணம் பூசுதல்,குடிநீர் தொட்டிகளை தூய்மைப்படுத்துதல்,பள்ளி வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளில் அனைவரும் முழு ஆர்வத்துடன் பங்கேற்றனர். மூன்று நாள் நிகழ்ச்சி 'சுத்தம் சோறு போடும்', 'சுற்றுப்புறத் தூய்மை சுகாதார மேன்மை' என்பதனை அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் அமைந்திருந்தது. ஆசிரியைகள் மாலதி, விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.