மேலும் செய்திகள்
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி மரணம்
17-Jun-2025
பாலக்காடு,; கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனை பகுதியை சேர்ந்தவர் ஷிபு, 39. இவர், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு பகுதியிலுள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. குமரம்புத்தூர் பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பில் மூன்று ஆண்டுகளாக வசித்தார். இந்நிலையில், நேற்று காலை இவர், தங்கியிருக்கும் கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு செல்லும் படிக்கட்டு பகுதியில் விழுந்து, தலையில் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்தார். அங்கு குடியிருப்போர், இதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த மண்ணார்க்காடு போலீசார், ஷிபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். படிக்கட்டில் கால் தவறி விழுந்து ஷிபு இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
17-Jun-2025