உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உலகை புரட்டி போடும் அறிவியல் தொழில் நுட்பம்; உஷாராக மாணவர்களுக்கு அறிவுரை

உலகை புரட்டி போடும் அறிவியல் தொழில் நுட்பம்; உஷாராக மாணவர்களுக்கு அறிவுரை

குன்னுார்; குன்னுார் அரசு ஐ.டி.ஐ., நிறுவனத்தில், உலக எழுத்தறிவு தின சிறப்பு கருத்தரங்கு நடந்தது. ஐ.டி.ஐ., முதல்வர் ஜஸ்டிஸ் ஜெபராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ பேசியதாவது: வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, உலக எழுத்தறிவு தினத்தின் நடப்பாண்டுக்கான நோக்கம். நாட்டில், எழுத்தறிவு விகிதம், 82 சதவீதம் உள்ள போது, 'கேரளாவில், 94 சதவீதம்; தமிழகத்தில் 90 சதவீதம்,' என, முன்னிலையில் உள்ளது. நவீன பார்வையில் எழுத்தறிவு, அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அறிவியல் தொழில்நுட்ப அறிவை பெற்றுள்ளது. பிரபஞ்சம் முழுவதுமுள்ள கோடான கோடி நட்சத்திரங்கள் முதல், பூமியில் உள்ள செடி கொடிகள் மற்றும் பூச்சி இனங்கள் வரை அனைத்தும் செயல்படும் தொழில் நுட்பமாக குவாண்டம் தொழில்நுட்பம் உள்ளது. குழந்தைகள் வளர்வதும், முதியவர்கள் மரணத்தை நோக்கி போவதும் குவாண்டம் அறிவியலின் செயல்பாடுகளால் தான். மரணம் என்பது குவாண்டம் இயக்கத்தின் 'பிரேக் அப்' எனப்படும் முடிவுதான். 'பயோ டெக்னாலஜி' எனப்படும் உயிரியல் தொழில்நுட்பம் வருங்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய தொழில்நுட்பமாக அமைந்துள்ளது. மனித உடலில், 37 லட்சம் கோடி செல்கள் இருப்பதாக அறிவியல் கண்டறிந்துள்ளது. அதில், 1200 கோடி செல்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, மனித 'செல் அட்லஸ்' ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மரபணு மூலம் பரவும் அனைத்து வியாதிகளுக்கும் 'ஜீன் எடிட்டிங்' முறையில் தீர்வு காணலாம். அண்மையில் ரஷ்யாவில் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது,அறிவியல் தொழில்நுட்பத்தின்ஒவ்வொரு துறையிலும் பிரம்மாண்டமான வளர்ச்சி காணப்படுகிறது. இன்றைய இந்த நவீன அறிவியல் துறையில், குவாண்டம் அறிவியல், 'ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், பயோ டெக்னாலஜி' போன்றவை, 10 ஆண்டுகளில் உலகை தலைகீழாக புரட்டிப்போடும் தொழில்நுட்பங்களாக உள்ளன. மாணவர்கள் வருங்காலத்தின் தேவையை தற்போதே கணக்கில் கொண்டு தங்கள் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஆசிரியர் ராஜூ பேசினார். விரிவுரையாளர்கள் ஸ்ரீகுமார், மூர்த்தி, மயில்சாமி வாழ்த்தி பேசினர். விரிவுரையாளர் கனகசுந்தரம் வரவேற்றார். விரிவுரையாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை