ஸ்காட்லாந்து பேக் பைப்ஸ் இசைத்த ராணுவ வீரர்கள்
குன்னுார்; குன்னுார் வெலிங்டன் ராணுவ மையத்தில், 'பேக்பைப்ஸ்' இசை கருவியை தற்போதும் பழமை மாறாமல் இசைப்பது அனைவரையும் கவர்ந்து வருகிறது.குன்னுார் வெலிங்டன், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், அக்னி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு உள்ள ராணுவ வீரர்கள் பேண்ட் வாத்திய இசை குழுவில் சிறந்து விளங்கி, 2023ல் தேசிய அளவில் டில்லியில் நடந்த அணி வகுப்பில், 2ம் இடம் பிடித்தனர்.இந்த சிறப்பு பெற்ற பேண்ட் இசையில், ஆங்கிலேயர் காலத்தில், 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து 'பேக் பைப்ஸ்' எனப்படும் இசை கருவிவை தற்போதும் இசைத்து வருகின்றனர். கடந்த 1600ம் ஆண்டுகளில் ஸ்காட்லாந்து ரெஜிமென்ட் பிரிவுகளில் இந்த இசை கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. குன்னுார் ஜிம்கானா மைதானத்தில் நடந்த விழாவில், ராணுவ பேண்ட் வாத்திய இசை குழுவினரின் இசை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.