உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கடைகளுக்கு இரவில் சீல் வைப்பு

கடைகளுக்கு இரவில் சீல் வைப்பு

குன்னுார்; குன்னுார் நகராட்சி மார்க்கெட்டில், இரவு நேரத்தில் கடைகளுக்கு 'சீல்' வைத்ததால் வியாபாரிகள் அதிருப்தியடைந்தனர்.குன்னுார் மார்க்கெட் கடைகளுக்கு, நகராட்சி வாடகை வசூலித்து வருகிறது. இந்நிலையில், 41.50 கோடி ரூபாயில் கடைகளை இடித்து, 'பார்க்கிங்' வசதியுடன் புதிய கடைகள் கட்ட முடிவு செய்து அதற்கான பணிகளில் நகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதே சமயம், ஏற்கனவே உயர்த்தப்பட்ட கடை வாடகை நிலுவை தொகையை வசூலித்து வருகிறது. இதனால், வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 15 கடைகளுக்கு திடீரென அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இதில், ஆளும் கட்சியை சேர்ந்த நபர் ஒருவருக்கு, மட்டும் அனுமதி அளித்து சென்றால் மற்ற வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ