உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சம வேலைக்கு சம ஊதியம்: இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சம வேலைக்கு சம ஊதியம்: இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

ஊட்டி:ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் சார்பில், கோரிக்கையை வலியுறுத்தி, 18வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 'பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, போதிய ஊதியம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு, 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.ஆனால், இதுவரை அமல்படுத்தப்பட வில்லை. எனவே, மாநில அரசு, 'சம வேலைக்கு சம ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோஷம் எழுப்பப்பட்டது. சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி, பொருளாளர் அருண் பிரபு, மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் சித்தராணி உட்பட, இடைநிலை ஆசிரியர் ஆசிரியைகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ