உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடியினருக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த கருத்தரங்கு

பழங்குடியினருக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த கருத்தரங்கு

கூடலுார்: கூடலுார் அரசு கல்லுாரில் நடந்த, 'பழங்குடியின மக்களுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல்' குறித்த கருத்தரங்கு நடந்தது. இயற்பியல் துறை தலைவர் அர்ஜுணன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொ) சுபாஷினி தலைமை வகித்தார். பேராசிரியர் மகேஸ்வரன், சுரேஷ் முன்னிலை வகித்தனர். தாளூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் ரஷீத் கஜாலி, அமுதீஸ்வரன் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, நடந்த கருத்தரங்கில், நிலையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து, அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயல்பியல் துறை தலைவர் பாலமுருகன், புளியம்பாறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், ஊட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் வெங்கடேஸ்வரி ஆகியோர் விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை