உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் பழங்குடியின பெற்றோருக்கு அறிவுரை பழங்குடியின பெற்றோருக்கு அறிவுரை

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் பழங்குடியின பெற்றோருக்கு அறிவுரை பழங்குடியின பெற்றோருக்கு அறிவுரை

பந்தலுார்: 'பழங்குடியின பெற்றோர் தங்கள் குழந்தைகளை, கல்வி கற்பிக்க செய்தால் மட்டுமே எதிர்காலம் வளமாகும்,' என, தெரிவிக்கப்பட்டது.பந்தலுார் அருகே தேவாலா மூச்சுகுன்னு பழங்குடியின கிராமத்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி பாலமுருகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, கிராமத்தில் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல், வீட்டில் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து பழங்குடியின பெற்றோரிடம் கேட்டபோது, 'இரவு முழுவதும் யானை கிராமத்தை முற்றுகையிட்டதால், குழந்தைகள் உறங்கவில்லை. மேலும், வாகனமும் வராததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை,' என, தெரிவித்தனர். நீதிபதி பால முருகன் கூறுகையில், ''பழங்குடியின மக்கள் தங்கள் குழந்தைகளை தினசரி பள்ளிக்கு அனுப்ப முன் வரவேண்டும். கல்வி மட்டும் இன்றி குழந்தைகளுக்கு தேவையான உணவு மற்றும் அனைத்து உபகரண பொருட்களும், அரசு மூலம் இலவசமாக வழங்கப்படும் நிலையில், பள்ளிக்கு சென்று கல்வி கற்றால் மட்டுமே, எதிர்காலத்தில் பழங்குடியின சமுதாயம் முன்னேற்றம் காண முடியும். தற்போதைய குழந்தைகள் படித்து நாளை பெரியவர்கள் ஆனால் அரசின் திட்டங்களை கேட்டு பெறவும், கிராமத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டு வரவும் இளைய சமுதாயத்தை உருவாக்க இயலும்,'' என்றார். ஆய்வின்போது, டி.எஸ்.பி. ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி,வனச்சரகர் சஞ்சீவி, வி.ஏ.ஓ. பார்வதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ