உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாலியல் வன்கொடுமை குற்றவாளி கைது

பாலியல் வன்கொடுமை குற்றவாளி கைது

பாலக்காடு; பாலக்காடு அருகே, சிறுவனிடம் இயற்கைக்கு மாறான பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், விளையோடி பகுதியை சேர்ந்தவர் ரஸ்தலி, 39. இவர், நேற்று முன்தினம் நபூரிச்சள்ளை பகுதியில் கடைக்குச் சென்ற ஒன்பது வயது சிறுவனை, தனியாக அழைத்து சென்று இயற்கைக்கு மாறான பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக, சிறுவனின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில், மீனாட்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் தீபு தலைமையிலான போலீசார், ரஸ்தலியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை