உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நடைபாதையில் கடைகள்; சுற்றுலா பயணிகளுக்கு சிரமம்

நடைபாதையில் கடைகள்; சுற்றுலா பயணிகளுக்கு சிரமம்

கோத்தகிரி : கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் நடைபாதைகளில் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், மக்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.கோத்தகிரி பேரூராட்சி, சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகர பகுதியில், போதிய அளவில் கட்டமைப்பு வசதிகள் இல்லை. குறிப்பாக, தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்கு முடியாத நிலை உள்ளது.இதனால், அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், மார்க்கெட் பகுதியில், கடைகள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ளதால் நாள்தோறும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். மக்கள் சிரமம் இல்லாமல் சென்று வர ஏதுவாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.சமீப காலமாக நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கடைகள் வைத்துள்ளதால், உள்ளூர் மக்கள்; சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள் கூறுகையில்,'கோத்தகிரியில் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர்கள் பயன்படுத்தும் நடைபாதைகளை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை