உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுருங்கும் கருமந்திகள் வாழ்விடம்; வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை

சுருங்கும் கருமந்திகள் வாழ்விடம்; வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை

கூடலூர்: நீலகிரி வனத்தில் கருமந்திகளை சமூக விரோதிகள் வேட்டையாடுவதை தடுக்க வேண்டும். என, வன விலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.நீலகிரி மாவட்டம், பல அரிய வகை விலங்குகள், பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. இதில், சிங்கவால் குரங்குகள் கீழ்நாடுகாணி வனப்பகுதியிலும், பாறு கழுகுகள், கழுதைப்புலிகள் முதுமலை,மசினகுடி, மாயாறு பகுதிகளில் காணப்படுகிறது. தற்போது, கூடலூரில் ஓவேலி, குண்டம்புழா, நாடுகாணி மற்றும் நடுவட்டம் பகுதிகளில் குறிப்பிட்ட சில வனங்களில் மட்டும் கருமந்தி(கருங்குரங்கு) காணப்படுகிறது. நீலகிரியில் பரவலாக காணப்பட்ட கருமந்திகள் எண்ணிக்கை குறைந்து வாழ்விடமும் சுருங்கி வருவது வனத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலைத் தொடர்ந்தால், பாறு கழுகுகள், சிங்கவால் குரங்குகள், கழுதைப்புலி போன்ற வன விலங்குகள் அழியும் சூழல் உள்ளது. வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், ' கருமந்தியில் மருத்துவ குணம் இருப்பதாக கூறி சிலர் இதனை வேட்டையாடுவதால், இவைகள் அழிந்து வருகிறது. இதனை தடுக்க, வனத்துறை கணக்கெடுப்பு மேற்கொண்டு,அழிவிலிருந்து இவைகளை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ