உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  எஸ்.ஐ.ஆர்., விண்ணப்ப படிவம்: உதவ அதிகாரிகளுக்கு அறிவுரை

 எஸ்.ஐ.ஆர்., விண்ணப்ப படிவம்: உதவ அதிகாரிகளுக்கு அறிவுரை

குன்னுார்: 'வாக்காளர்களின் படிவங்களை பூர்த்தி செய்வதில் சந்தேகம் இருந்தால், உடனடியாக பூர்த்தி செய்ய உதவி செய்ய வேண்டும்,' என, மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார். நீலகிரியில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த, 4ம் தேதியிலிருந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த, 2 நாட்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்கள் திரும்ப பெறும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், குன்னுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பெரிய பள்ளிவாசலில் நடந்த சிறப்பு முகாமை, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் லட்சுமி பவ்யா நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். வாக்காளர்களுக்கு படிவங்களை பூர்த்தி செய்வதில், சந்தேகம் இருந்தால் உடனடியாக அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உதவி செய்து, அந்த கணக்கிட்டு படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, குன்னுார் நகராட்சி அலுவலகத்தில் நடந்து வரும் பதிவேற்றும் பணிகள் நேரில் ஆய்வு செய்தார். ஓட்டுப்பதிவு அலுவலரான சார் ஆட்சியர் சங்கீதா, உதவி ஒட்டுப்பதிவு அலுவலரான தாசில்தார் ஜவகர், குன்னுார் நகராட்சி தலைவர் சுசீலா, அரசு தலைமை காஜி முஜ்பூர் ரஹ்மான், திட்டக்குழு உறுப்பினர் ராமசாமி மற்றும் பள்ளிவாசல் உறுப்பினர்கள், ஐக்கிய ஜமாத் உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி