உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுாரில் மின் வேலியில் சிக்கி சிறு விவசாயி பரிதாப பலி

கூடலுாரில் மின் வேலியில் சிக்கி சிறு விவசாயி பரிதாப பலி

கூடலுார்; கூடலுார் மாக்கமூலா அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி பலியானார்.கூடலுார், புத்துார் வயல் பகுதியை சேர்ந்தவர் ரவி,58. இவர், மாக்கமூலா பகுதியில் குத்தகைக்கு இடம் எடுத்து பாகற்காய் விவசாயம் செய்து வந்தார். தோட்டத்திற்குள் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைவதை தடுக்க மின்வேலி அமைத்துள்ளார். மேலும், இரவில் அங்கு தங்கி கண்காணிப்பதும் வழக்கம்.நேற்று முன்தினம், இரவு இவர் வீட்டுக்கு செல்லாமல், தோட்டத்தில் தங்கியுள்ளார். நேற்று, காலை தோட்டத்துக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்கள், அவர் இறந்து கிடப்பதை பார்த்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.கூடலுார் போலீசார் அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டவர், ஆய்வில், அங்கு அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, எஸ்.ஜ., கவியரசு வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !