உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலைகளில் பனி மூட்டம்; மிஸ்ட் லைட்டில் வாகனம் இயக்கம்

சாலைகளில் பனி மூட்டம்; மிஸ்ட் லைட்டில் வாகனம் இயக்கம்

குன்னுார் ; குன்னுார் சாலைகளில் கடும் பனிமூட்டம் நிலவியதால் சுற்றுலா வாகனங்கள் 'மிஸ்ட் லைட்' பயன்படுத்தி இயக்கப்பட்டன. குன்னுார் பகுதியில் கடந்த வாரம் பெய்த மழையை தொடர்ந்து காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, சீரான காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று குன்னுாரில் வெயில் நிலவிய போதும், லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் சுற்றுலா மையங்கள், குன்னுார் -- மேட்டுப்பாளையம் மலைபாதைகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால், இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமல் சுற்றலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். எனினும், பனிமூட்ட பகுதிகளில், புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். மலை பாதையில் அனைத்து வாகனங்களும் 'மிஸ்ட் லைட்' பயன்படுத்தி இயக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ