உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூட்டுறவு ஆண்டையொட்டி சமூக செயல்பாடுகள்

கூட்டுறவு ஆண்டையொட்டி சமூக செயல்பாடுகள்

ஊட்டி; கூட்டுறவு ஆண்டை ஒட்டி கூட்டுறவு துறை சார்பில், 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையானது நடப்பு ஆண்டான, 2025ம் ஆண்டை, உலக கூட்டுறவு ஆண்டாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, உலகம் முழுவதும் கூட்டுறவு இயக்கங்கள் வாயிலாக பல்வேறு சமூக செயல்பாடுகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி அருகே, எப்பநாடு பகுதியில் உள்ள எப்பநாடு தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடுவிழா நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைத்தார்.மாவட்டம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் உள்ள வளாகங்களில், 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ