உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

கோத்தகிரி : கோத்தகிரியில் 'பிளாஸ்டிக்' ஒழிப்பு திடக்கழிவு மேலாண்மை மற்றும் புத்தக வாசிப்பு குறித்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.கோத்தகிரி பேரூராட்சியை, குப்பை இல்லாத பசுமையான நகரமாக மாற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, திடக்கழிவு மேலாண்மைக்காக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, கோத்தகிரி பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் தலைமை வகித்தார்.சென்னை இளையவன் கலை குழு நிர்வாகி வினாயகமூர்த்தி தலைமையில் நடந்த கலை நிகழ்ச்சியில், 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை, கழிவறையின் அவசியம், டெங்கு மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சலை தடுப்பது மற்றும் புத்தக வாசிப்பதன் அவசியம், 'குறித்து பொது மக்களுக்கு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், பேரூராட்சிஅலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட, பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ