உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்

ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்

குன்னுார்:கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரிக்கும். இதனால், இம்மாதம், 28ம் தேதியில் இருந்து, ஜன., 2ம் தேதி வரை ஆறு நாட்கள் ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை, 9:10 மணி; ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு, 11:25 மணி என, இருமுறை ரயில் இயக்கப்படுகிறது.குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு காலை, 8:20 மணி, ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு மாலை, 4:45 மணி என, இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.ஊட்டி -- கேத்தி இடையே, ரவுண்ட் டிரிப் ஜாய் டிரைன் எனும் சிறப்பு ரயில் காலை, 9:45 மணி, காலை, 11:35 மணி, மாலை, 3:00 மணி என, இந்த நாட்களில் தினமும், மூன்று முறை சுற்று ரயில்களாக இயக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ