உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அக். 20 வரை சிறப்பு மலை ரயில்கள் இயங்கும்

அக். 20 வரை சிறப்பு மலை ரயில்கள் இயங்கும்

குன்னுார்; குன்னுார் - ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்ட, சிறப்பு மலை ரயில் இயக்கம், அக்., 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குன்னுார்- - ஊட்டி இடையே நாள்தோறும் தலா, 4 முறை; மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே, தலா ஒரு முறையும் இயக்கப்படும் மலை ரயலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். விடுமுறை ஸ்பெஷல் ரயில்கள் கடந்த மார்ச், 28 முதல் ஆக., 18 வரை, வார இறுதி நாட்களில், வெள்ளி முதல் திங்கள் கிழமை வரை இயக்கப்பட்டன. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுவதால், அக்., 20 வரை சிறப்பு ரயில் இயக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு, ஆக., 23, 30; செப்., 5, 7; அக்., 2, 4, 17, 19 ஆகிய தேதிகளில் காலை, 9: 10 மணிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஆக. 24, 31; செப்., 6, 8 மற்றும் அக்., 3, 5, 18, 20 ஆகிய தேதிகளில் காலை, 11: 25 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும், குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு, ஆக., 24, 31; செப்., 6, 8 மற்றும் அக்., 3,5,18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் காலை, 9:20 மணி; ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு ஆக., 23, 30; செப்., 5, 7 மற்றும் அக்., 2, 4, 17, 19, ஆகிய தேதிகளில் பிற்பகல், 2:50 மணிக்கும் இயக்கப்படுகிறது. 'ஊட்டி- கேத்தி இடையே செப்., 5,6,7; அக்., 2 முதல் 5 வரை மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில், காலை, 9:45 மணி, பகல் 11:30 மணி, மாலை 3:00 மணி,' என, 3 சுற்று ரவுண்ட் டிரிப்புகள், 'ஜாய் ரைடு' சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தென்னக ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'முதல் வகுப்பு, 80 இருக்கைகள்; 130 இரண்டாம் வகுப்பு இருக்கைகள்,' என, 210 பயணிகள் பயணம் செய்யும் சிறப்பு ரயிலில் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகள் இயக்கப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை