உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறப்பு வார்டு கூட்டம் குறைகளை தெரிவிக்கலாம்

சிறப்பு வார்டு கூட்டம் குறைகளை தெரிவிக்கலாம்

குன்னூர்: - குன்னூர் நகராட்சி சார்பில், சிறப்பு வார்டு கூட்டம் துவங்கியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் 27 முதல் 29ம் தேதி வரை சிறப்பு வார்டு கூட்டம் நடத்தி அதில், அடிப் படை தேவையான, குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு பராமரிப்பு, சாலை வசதி, பூங்கா, மழை நீர் வடிகால் போன்ற குறைபாடுகள் மக்கள் தெரிவிக்க, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டார். இதன்படி, குன்னூ ரில் முதற்கட்டமாக 10 வார்டு களுக்கான கூட்டம் சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள் தலைமையில் அந்தந்த வார்டு பகுதிகளில் நடந்தது. 1வது வார்டு மற்றும் 16வது வார்டில், நடந்த கூட்டத்தில், நகராட்சி தலைவர் சுசீலா, கமிஷனர் இளம்பரிதி பங்கேற்றனர். ஒவ்வொரு வார்டிலும், முக்கிய, 3 கோரிக்கைகள் முதல்வரின் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை