/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் ஸ்ரீ கிருஷ்ண பலராமர் தேர் திருவிழா; திரளான பக்தர்கள் தரிசனம்
ஊட்டியில் ஸ்ரீ கிருஷ்ண பலராமர் தேர் திருவிழா; திரளான பக்தர்கள் தரிசனம்
ஊட்டி: ஊட்டியில் ஸ்ரீ கிருஷ்ண பலராமர் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. ஊட்டி ஐந்து லாந்தர் மாரியம்மன் கோவில் அருகே நடந்த தேர் திருவிழாவை ஸ்வாமி குரு மஹராஜ் நல்லாசியுடன், இஸ்கான் கோவை தலைவர் ஸ்வாமி மஹராஜ் துவக்கி வைத்தார். லோயர் பஜார் சாலை, மத்திய பஸ் ஸ்டாண்ட், மெயின் பஜார், புளூ மவுண்டன், கமர்சியல் ரோடு, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், ஏ.டி.சி., எட்டின்ஸ் ரோடு வழியாக ஸ்ரீனிவாச பெருமாள் கல்யாண மண்டபம் வந்தடைந்தது. மாலை, 6:00 மணிக்கு ஸந்தியா ஆரத்தி, சிறப்பு உபன்யாசம் நிகழ்ச்சியை தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை, 5:30 மணிக்கு மங்கள ஆரத்தி ,7:30 மணிக்கு ஸ்ருங்கார ஆரத்தி , சிறப்பு உபன்யாசம் சுவாமி மஹராஜ் தலைமையில் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.