உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மாநில வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் கிராம பங்கேற்பு மதிப்பீடு திட்டத்தில் ஆய்வு

 மாநில வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் கிராம பங்கேற்பு மதிப்பீடு திட்டத்தில் ஆய்வு

கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை கிராமத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தோட்டக்கலை, 4ம் ஆண்டு பயிலும் மாணவர்கள், கிராம பங்கேற்பு மதிப்பீடு திட்டத்தில், விரிவான கிராம ஆய்வு மேற்கொண்டனர். கிராமத்தின் சமூக பொருளாதார மற்றும் இயற்கை வள நிலையை மக்களின் நேரடி பங்கேற்புடன் அறிந்து, உள்ளூர் தேவைகள் மற்றும் சிக்கல்களை அடையாளம் காண்பதே இந்த ஆய்வின் நோக்கம். இந்த ஆய்வின் போது, பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது கருத்துக்களையும், அனுபவங்களையும்பகிர்ந்து கொண்டனர். மேலும், மாணவர்கள், சமூக வரைப்படம், வள வரைபடம், காலவரிசை, பருவ கால காலண்டர், வென் வரைப்படம், பிரச்னைக்குரிய மரம், செல்வாக்கு வரைபடம் மற்றும் குறுக்கு நடை போன்றவற்றை, கிராம பங்கேற்பு மதிப்பீடு கருவிகளை பயன்படுத்தி தகவல்களை சேகரித்தனர். இதன் வாயிலாக, கிராம விவசாய முறைகள், தோட்டக்கலை பயிர்கள், நீர்வள பயன்பாடு, வேலைவாய்ப்பு நிலை, கல்வி மற்றும் சுகாதார வசதிகள் குறித்து, தெளிவான தகவல்கள் பெறப்பட்டன. கூக்கல்தொரை கிராமத்தில், தேயிலை, காய்கறி மற்றும் பழ பயிர்கள் முக்கியமாக பயிரிடப்படுகின்றன என்பதும், மழை சார்ந்த விவசாயம் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை போன்ற சவால்கள் உள்ளன என்பதும் ஆய்வில் தெரியவந்தது. மேலும், மக்களின் ஒற்றுமை, சுய உதவிக்குழுக்களில் செயல்பாடு மற்றும் இயற்கை வளங்கள் கிராமத்தில் பலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கோத்தகிரி கூக்கல்தொரை கிராமத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள், கிராம பங்கேற்பு மதிப்பீடு குறித்து ஆய்வு செய்தனர்.கோத்தகிரி கூக்கல்தொரை கிராமத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள், கிராம பங்கேற்பு மதிப்பீடு குறித்து ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை