உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 110 இடங்களில் சிலைகள்; இந்து முன்னணி ஏற்பாடு

110 இடங்களில் சிலைகள்; இந்து முன்னணி ஏற்பாடு

கூடலுார்; நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா நாளை (27ம் தேதி) கொண்டாடப் பட உள்ளது. இதையொட்டி நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள கோவில்கள், வீடுகள், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டு, சிலைகளை நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்ய முடிவு செய்துள்ளனர். கூடலுார் பகுதியில் இந்து முன்னணி சார்பில், 110 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து, பூஜிக்கப்பட்டு, 31ம் தேதி, சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, பாண்டியார்--புன்னம்புழா ஆற்றில், விசர்ஜனம் செய்ய உள்ளனர். இதற்காக, 3.5 முதல் 9.5 விஅடி உயரத்திலான விநாயகர் சிலைகள், கிராம பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.ஏற்பாடுகளை, இந்து முன்னணியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை