தெருவிளக்கு எரியல
ஊட்டி: ஊட்டி அப்பர்பஜார் மற்றும் படகு இல்ல சாலைகளில் இரவில் அடிக்கடி தெருவிளக்கு எரியாததால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் தெரு விளக்குகள் இருந்தும், அதனை முறையாக பராமரிக்காத காரணத்தால், பல விளக்குகள் எரியாமல் உள்ளன. அதில், நாள்தோறும் அதிகளவில் மக்கள் நடமாட்டம் உள்ள அப்பர்பஜார், படகு இல்லம் சாலையில் பல தெருவிளக்குகள் அடிக்கடி எரியாத காரணத்தால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகளும் இரவில் நடமாடுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, நகரில் எரியாத தெரு விளக்குளை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.