உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்; கிராம துாய்மை பணியில் மாணவர்கள்

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்; கிராம துாய்மை பணியில் மாணவர்கள்

கூடலுார் : மசினகுடி சொக்கநள்ளி கிராமத்தில், ஜி.ஆர்.ஜி., நினைவு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.மசினகுடி, வாழை தோட்டம் ஜி.ஆர்.ஜி., நினைவு மேல்நிலை பள்ளி, நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் சொக்கநள்ளி கிராமத்தில் நடந்தது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அனில்குமார் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் குமரன் தலைமை வகித்தார். மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் துவக்கி வைத்தார். சொக்கநள்ளி ஊர் தலைவர் மாரி, தன்னார்வலர் அப்பாஸ் துாய்மையின் அவசியம் குறித்து பேசினார். தொடர்ந்து, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கிராமத்தில் திறந்த வெளியில் கிடந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். ஆசிரியர்கள் சந்திரபாபு, சரவணன், மணிகண்டன், பிந்து பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை