உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவர்கள் பங்கேற்பு

போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவர்கள் பங்கேற்பு

பந்தலுார்; பந்தலுாரில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வை துறையினர் மற்றும் வருவாய் துறை இணைந்து பந்தலுாரில் மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தின. புதிய பஸ் நிலையத்தில் துவங்கிய பேரணியில் வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் வரவேற்றார். தாசில்தார் சிராஜுநிஷா, பந்தலுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நந்தகுமார் ஆகியோர், போதை பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இளைய தலைமுறையினர், மாணவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து, பந்தலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற, ஊர்வலம் பந்தலுார் பஜாரில் நடந்தது. ஊர்வலத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். வருவாய் ஆய்வாளர் கிரீஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ