உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாணவர் பேரவை தேர்தலில் ஆர்வத்துடன் ஓட்டளித்த மாணவர்கள்

மாணவர் பேரவை தேர்தலில் ஆர்வத்துடன் ஓட்டளித்த மாணவர்கள்

பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர் பேரவை தேர்தல் நடந்தது. அதில், முதல்வர் வேட்பாளருக்கு கவுதம செல்வன், பரத், சூரிய பிரகாஷ், கிருஷ்ணகுமார், சுவேதா, ஐசிகா ஆகியோர் போட்டியிட்டனர். 'நோட்டா' சின்னமும் இருந்தது. தேர்தல் அலுவலராக மாணவி ஜிஷ்ணு பிரியா பணியாற்றினார். தேர்தல் குறித்து மாணவ வேட்பாளர்கள், கடந்த ஒரு வாரமாகபிரசாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நாளன்று மாணவர்கள் மற்றும் மாணவிகள் வரிசையாக நின்று தங்கள் ஆதரவாளருக்கு ஓட்டளித்தனர். அதில், மாணவர் பேரவை தலைவராக பரத், துணைத் தலைவர்களாக ஐசிகா, சுவேதா தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமார் முன்னிலையில், பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, கல்வித்துறை, சுகாதாரத்துறை, உணவுத்துறை, விளையாட்டு துறை உள்ளிட்ட 12 துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட் டனர். பள்ளிக்கு விடுப்பு எடுத்த மாணவர்கள் அஞ்சல் ஓட்டும் செலுத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமார் கூறுகையில், 'எதிர்காலத்தில் நாம் சார்ந்துள்ள நாட்டிற்கு என்னென்ன சேவைகள் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ஓட்டளித்தது குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் ஆட்சி., அதிகாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும்,''என்றார். ஏற்பாடுகளை, பள்ளி ஆசிரியர்கள்; பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை