உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதை இல்லா சமுதாயம் உருவாக்க மாணவர்கள் உறுதி

போதை இல்லா சமுதாயம் உருவாக்க மாணவர்கள் உறுதி

பந்தலுார்; பந்தலுார் அருகே எருமாடு பகுதியில் மராடி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 8ம் வகுப்பு நிறைவு செய்து செல்லும் மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.ஆசிரியர் ஏஞ்சல் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் அஷ்ரப் தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்கள் படிப்பில் நாட்டம் செலுத்த வேண்டும். அதற்கு பெற்றோர் தங்கள் குழந்தைகளை சிறந்த முறையில் படிக்க வைக்க ஊக்கம் அளிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்துடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, மாணவர்கள் தங்களது நினைவுகளை ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன், அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினர். பெற்றோர் சார்பிலும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.பின், கேக் வெட்டி மாணவர்கள் அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தனர். 'போதை இல்லா சமுதாயத்தை உருவாக்குவோம்,' என, உறுதி மொழி எடுத்து கொண்டனர்.மகிழ்ச்சியுடன் பள்ளியில் இருந்து விடை பெற்று சென்றனர்.பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீஜா, அச்சம்மா, ஜமீலா, சிந்து, சாந்தகுமாரி மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி