மாணவர்களின் யோகா சாதனை புத்தகத்தில் பதிவு
ஊட்டி; ஊட்டி ரெக்ஸ் பள்ளியில் பயிலும், 12 மாணவிகள், 3 மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் பள்ளியில், 20 நிமிடம் மிதக்கும் அகர்னா தனுராசனா ( வான் வழி யோகா) நிகழ்த்தினர். இதன் வீடியோவை சாதனைகளை பதிவு செய்யும் அமைப்பான ஆசிய சாதனை புத்தக அமைப்பு அனுப்பினர்.அந்த அமைப்பிலிருந்து ஆசிய சாதனை புத்தகத்தில் தாங்கள் நிகழ்த்திய வான் வழி யோகாவுக்கு அங்கீகாரம் வழங்கியது. மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா , பள்ளி முதல்வர் கிரிஸ்டோபர் லாரன்ஸ், ஆசிரியை இதயா ஆகியோர் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினர். யோகா ஆசிரியர் ஆண்டனி உட்பட பலர் பங்கேற்றனர்.