உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்

குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்

கூடலுார்; மசினகுடி பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் துறை சார்பில், 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர்.ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு முதுமலை, மசினகுடி வழியாக வெளி மாநில சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். வார விடுமுறை முக்கிய பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகையால் மசினகுடியில், அடிக்கடி வாகனம் நெரிசல் ஏற்பட்டு, ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், வாகன போக்குவரத்தை சீரமைக்கவும், குற்றங்களை தடுக்கவும் போலீஸ் துறை சார்பில், 16 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுப்பாடு அறை மசினகுடிபோலீஸ் ஸ்டேஷனில் அமைக்கப்பட்டுள்ளது.இதன் துவக்க விழா, மசினகுடி போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. மசினகுடி இன்ஸ்பெக்டர் சிவகுமார் வரவேற்றார். நீலகிரி எஸ்.பி., நிஷா தானியங்கி கேமராக்கள் செயல்பாட்டை துவக்கி வைத்து, கேமராவில் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்தார். கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், போலீசார் மசினகுடி மக்கள் பங்கேற்றனர்.போலீசார் கூறுகையில், 'மசினகுடி பகுதியில் பொருத்தப்பட்ட கேமராக்களை கொண்டு, 3 கி.மீ., சுற்றளவு பகுதிகளை கண்காணித்து குற்றங்களை தடுக்கவும், போக்குவரத்து சீரமைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை