உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வரி செலுத்தியும் சோதனை; அலட்சிய அதிகாரிகளால் வேதனை.. சாலை சீரமைப்பில் கிராம மக்கள்

வரி செலுத்தியும் சோதனை; அலட்சிய அதிகாரிகளால் வேதனை.. சாலை சீரமைப்பில் கிராம மக்கள்

பந்தலூர்: பந்தலூர் அருகே பெக்கி கிராமத்தில், சாலையை சீரமைக்க அரசு முன் வராத நிலையில், கிராம மக்கள் இணைந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட, பெக்கி-, முண்டக்கொல்லி-, மாங்கம்வயல் கிராமங்களில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். கிராமத்திற்கு செல்லும் மண் சாலையை கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஊராட்சி சார்பில் தார் சாலையாக மாற்றம் செய்தனர். சாலை சேதமாகி ஆங்காங்கே குழிகளாக மாறி உள்ளது. கிராமங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல, 2 கி. மீ., தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாலை சேதமடைந்ததால் கிராமங்களுக்கு எந்த வாகனங்களும் வந்து செல்ல முடியாத நிலையில், அவசர தேவைகளுக்கு வரும் ஆட்டோ மற்றும் ஜீப்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வினியோகம், பசுந்தேயிலை கொள்முதலுக்கு லாரிகள் வராத நிலையில், தலைசுமையாக எடுத்து செல்ல வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சாலையை சீரமைக்க கிராம சபை கூட்டங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை, கிராம மக்கள் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை சாலையை சீரமைக்க சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சமீபத்தில் பெய்த மழைக்கு ஆங்காங்கே மழை நீர் தேங்கி வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அரசு மீது நம்பிக்கை இழந்த மக்கள் ஒன்றிணைந்து, தங்களது சொந்த செலவில் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் உள்ள குழி களில் மண், கற்கள் போட்டு சீரமைத்துடன், மழை வெள் ளம் வழிந்தோட சாலை ஓரத் தில் கால்வாய் அமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை