நடப்பாண்டு 81.15 கோடி கிலோ தேயிலை உற்பத்தி கடந்த ஆண்டை விட 8.4 சதவீதம் அதிகரிப்பு
குன்னுார்:நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, 9 மாதங்களில், தேயிலை உற்பத்தி. 8.4 சதவீதம் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த, 9 மாதங்களில், 81.15 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த அளவு கடந்த ஆண்டு, 74.89 கிலோவாக இருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, 6.26 கோடி கிலோ உற்பத்தி அதிகரித்தது. கடந்த மாதங்களில் வட மாநில உற்பத்தி, 65.81 கோடி கிலோ இருந்தது. கடந்த ஆண்டு, 60.74 கோடி கிலோ ஆகும். 5.07 கோடி கிலோ தற்போது உயர்ந்தது. தென் மாநிலங்களில், 15.34 கோடி கிலோ உற்பத்தியான நிலையில், கடந்த ஆண்டு, 14.14 கோடி கிலோவாக இருந்தது. 1.2 கோடி கிலோ அதிகரித்தது. நாடு முழுவதும் தேயிலை உற்பத்தி கணிசமாக உயர்ந்து வரும் சூழ்நிலையில், நடப்பாண்டில் இதுவரை மொத்த உற்பத்தி, கடந்த ஆண்டைவிட, 8.4 சதவீதம் அதிகமாகியுள்ளது. தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க (உபாசி) செயலாளர் சஞ்சித் கூறுகையில்,''கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டு, 9 மாதங்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. எனினும், கடந்த, 2023ம் ஆண்டை விட கடந்த ஆண்டு தேயிலை உற்பத்தி வீழ்ச்சியை கண்டுள்ளது. இந்த ஆண்டு சீரான காலநிலை காரணமாக பசுந்தேயிலை மகசூல் மற்றும் உற்பத்தி பழைய நிலைக்கு திரும்பியுள்ளது,'' என்றார்.