உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோவில் பிரச்னை : கலெக்டர் முகாம் அலுவலகம் முற்றுகை

கோவில் பிரச்னை : கலெக்டர் முகாம் அலுவலகம் முற்றுகை

ஊட்டி:ஊட்டி அருகே மேல் தாவணெ மக்கள் கோவில் பிரச்னைக்கு தீர்வு காண கோரி கலெக்டர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஊட்டி மேல் தாவணெ பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நடப்பாண்டு ஹெத்தையம்மன் திருவிழா நாளை 17ம் தேதி நடைபெற உள்ளது. திருவிழா கொண்டாடுவதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு பிரிவினர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி இரவு, 9:00 மணியளவில் ஊட்டி கலெக்டர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின், சாலை மறியலில் ஈடுபட்டனர் .சம்பவ பகுதிக்கு ஊட்டி ஆர்.டி.ஒ., சதீஷ் குமார் வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை 17ம் தேதி கிராமத்திற்கு வந்து இரு தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும். என, தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி