மேலும் செய்திகள்
செப்.27, 28ல் சுருளி அருவியில் சாரல் விழா
26-Sep-2025
ஊட்டி: -ஊட்டியில் நான்காவது புத்தக திருவிழா நேற்று துவங்கியது. நீலகிரி மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை மற்றும் பப்பாசி ஆகியவை இணைந்து, ஆண்டு தோறும், புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. நடப்பாண்டு, 4வது புத்தகத் திருவிழா, பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடந்தது. அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், புத்தக திருவிழாவை துவக்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார். இதில், கலெக்டர் லட்சுமி பவ்யா, ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ், எஸ்.பி., நிஷா, மாவட்ட வன அலுவலர் கவுதம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். புத்தக திருவிழா, அடுத்த மாதம் 2ம் தேதிவரை, 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில், 25 க்கும் மேற்பட்ட அரங்குகளில், பல்லாயிர கணக்கான புத்தகங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. தினமும், காலை, 10:00 மணி முதல், இரவு, 7:00 மணிவரை நடைபெறுகிறது. இதில், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், புத்தக அரங்கங்கள், சிந்தனை அரங்கம், உணவரங்கம், அரசுத் துறைகளில் கண்காட்சி அரங்கங்கள் இடம் பெற்றுள்ளன. விழாவின் முதல் நிகழ்ச்சியாக, 'எண்ணித் துணிக கருமம்' என்ற தலைப்பில், மதுரையை சேர்ந்த ராமகிருஷ்ணனின் சிறப்புரை நடந்தது. இதில், ஏராளமான மாணவர்கள் உட்பட, பொதுமக்கள் பங்கேற்று புத்தகங்களை வாங்கி சென்றனர்.
26-Sep-2025