உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காலை நேரத்தில் ஊருக்குள் வந்த யானை

காலை நேரத்தில் ஊருக்குள் வந்த யானை

பந்தலுார்; பந்தலுார் அருகே பந்தபிலா, அம்மன்காவு பகுதியில் காலை நேரத்தில் ஊருக்குள் வந்த யானையால் பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பந்தபிலா, அம்மன்காவு, மின்னல்குன்னு கிராமங்கள் அமைந்துள்ளன. கிராமங்களை ஒட்டி டான்டீ தேயிலை தோட்டமும் அமைந்துள்ளது. இங்கு காலை, 8:00 மணிக்கு ஒற்றை ஆண் யானை வந்தது. காலை நேரத்தில் ஊருக்குள் யானை வந்ததால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலை செல்லும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர். யானை ஓட்டம் பிடித்தவர்களை துரத்தி சென்றது. மேலும், சிவசுப்ரமணியம் என்பவரின் வீட்டு வாசலில் இருந்த தண்ணீர் தொட்டியை உடைத்ததுடன், சாரதா என்பவரின் வீட்டு அருகே இருந்த மாட்டு கொட்டகையை சேதப்படுத்தியது. வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனவர் ஆனந்த் தலைமையிலான வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் யானையை அடர்த்தியான வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன் பின் மக்கள் பணிக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை