உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் அரசு பள்ளியில் கலை கல்லுாரி துவக்கம்; 270 சீட்களுக்கு 800 விண்ணப்பம் வந்ததாக அரசு கொறடா பெருமிதம்

குன்னுார் அரசு பள்ளியில் கலை கல்லுாரி துவக்கம்; 270 சீட்களுக்கு 800 விண்ணப்பம் வந்ததாக அரசு கொறடா பெருமிதம்

குன்னுார், ; குன்னுார் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளியில், புதிதாக அரசு கலை கல்லுாரி துவங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன், அரசு கொறடா ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.அரசு கொறடா ராமச்சந்திரன் பேசுகையில், ''குன்னுாரில் துவக்கப்பட்டபுதிய அரசு கலை கல்லுாரிக்கு, 270 சீட்கள், நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், 800க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. பந்துமை அருகே இந்த கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டி, 2,500 மாணவர்கள் பயில்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். நாட்டிலேயே தமிழகத்தில் தான், 53 சதவீதம் பேர் உயர்கல்வி பயின்று வருகின்றனர். மற்ற மாநிலங்களில், 23 சதவீதமாக உள்ளது,'' என்றார்.அமைச்சர் சுவாமிநாதன்அளித்த பேட்டியில், ''இந்த ஆண்டு மானிய கோரிக்கையில் அறிவித்ததன் அடிப்படையில், 11 கல்லுாரிகளை, முதல்வர் ஸ்டாலின், காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். அதில், குன்னுாரில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த அரசு கல்லுாரி தற்போது திறக்கப்பட்டு, விழாவில் பங்கேற்றது பெருமை அளிக்கிறது,'' என்றார்.மண்டல இணை இயக்குனர் கல்லூரி கல்வித்துறை (கோவை), கலைச்செல்வி, குன்னுார் நகராட்சி தலைவர் சுசீலா, குன்னுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) சுனில், கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம்

இந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பி.பி.ஏ., வணிக நிர்வாகவியல், பி.காம் (பொது), பி.எஸ்.சி., தாவரவியல், பி.எஸ்.சி., கணினி அறிவியல் ஆகியவை ஆங்கில பிரிவிலும், பி.எஸ்.சி., விலங்கியல் பிரிவு மட்டும் தமிழ் பாடப்பிரிவாக செயல்படவுள்ளது. 'தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்' என, அரசு கூறி வந்த போதும், 4 பிரிவுகளை ஆங்கிலத்தில் கொண்டு வந்து, விலங்கியல் பிரிவு மட்டுமே, தமிழ் வழியில் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி