உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலையேற்றம் மனதிற்கு புத்துணர்வை தரும் பங்கேற்ற குழுவினர் மகிழ்ச்சி

மலையேற்றம் மனதிற்கு புத்துணர்வை தரும் பங்கேற்ற குழுவினர் மகிழ்ச்சி

பந்தலுார் : 'நீலகிரியில் மேற்கொள்ளப்படும் மலையேற்றம் மனதுக்கு புத்துணர்வு தரும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும், தனியார் எஸ்டேட், வனப்பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. மேலும், எஸ்டேட் பராமரிப்பிலும் ஒரு சில வனப்பகுதிகள் உள்ளதுடன், ஆறுகள் மற்றும் நீரோடைகள் என பார்ப்பதற்கு ரம்மியத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் செயல்படும், மலையேற்ற குழுவினர், எஸ்டேட் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதி வழியாக மலையேற்ற பயிற்சியை துவக்கினர். நேற்று முன்தினம் எஸ்டேட் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் இதன் ஒருங்கிணைப்பாளர் ஷாஜி வரவேற்றார். ஏற்பாட்டாளர் எஸ்டேட் துணை மேலாளர் பிரபாகரன் பேசுகையில்,''முதல் கட்டமாக வயநாடு பகுதியில் உள்ள மலையேற்ற குழுவினர் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் தொடர்ச்சியாக, இதில் பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார். தொடர்ந்து, எஸ்டேட் முதுநிலை மேலாளர் பிரசாத், கூடுதல் மேலாளர் கொச்சுமோன் ஆகியோர் மலையேற்றத்தை துவக்கி வைத்தனர். 15 கி.மீ., துாரம் நடந்த மலையேற்றத்திற்குப் பின்னர் குழுவினர் கூறுகையில்,'' நீலகிரியில் தேயிலை தோட்டம் மற்றும் அதனை சார்ந்த வனப்பகுதியில் பயிற்சி மேற்கொண்டது புதிய ஒரு அனுபவத்தை தந்தது. தொடர்ந்து மலை ஏற்றத்தில் ஈடுபட்டால் மனதிற்கு புத்துணர்வை ஏற்படுத்தும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி