உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பஸ் ஸ்டாண்டில் எரியாத மின் விளக்கு; சீரமைத்த நகராட்சி நிர்வாகம்

பஸ் ஸ்டாண்டில் எரியாத மின் விளக்கு; சீரமைத்த நகராட்சி நிர்வாகம்

கூடலுார்; கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பழுதடைந்துள்ள 'ஐமாஸ்' மின் விளக்கை நகராட்சி நிர்வாகம் சீரமைத்தது.கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை பிரிந்து செல்கிறது. இப்பகுதியில் எப்போதும் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால், போலீசார் சிக்னல் அமைத்து வாகன போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர்.இப்பகுதியில், முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நகராட்சி சார்பில் ஐமாஸ் மின் விளக்கு அமைத்துள்ளனர். சமீபத்தில் பழுதடைந்த விளக்கு சீரமைக்கவில்லை. இதனால், இரவில் அப்பகுதியில் போதிய வெளிச்சம் இன்றி மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். புகாரையடுத்து, நேற்று நகராட்சி நிர்வாகம் விளக்கில் ஏற்பட்ட பழுதை சீரமைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ