உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பராமரிக்க மறந்த நகராட்சி பயனில்லாமல் போன இ--டாய்லெட்

பராமரிக்க மறந்த நகராட்சி பயனில்லாமல் போன இ--டாய்லெட்

குன்னுார் : குன்னுார் நகராட்சியில் போதுமான கழிப்பிட வசதிகள் இல்லாததால், மக்கள் மிகவும் சிரமப்படும் நிலையில், 'லெவல் கிராசிங் இ--டாய்லெட்' பராமரிப்பு இல்லாமல் உள்ளது.குன்னுார் பஸ் ஸ்டாண்ட், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதிகளில் பல ஆண்டுகளாக இலவச கழிப்பிடம் அமைக்க நகராட்சிக்கு வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் லெவல் கிராசிங் அருகே, துாய்மை மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய, நவீன தொழில் நுட்பத்துடன் தானியங்கி முறையில் இயங்கும், 'இ--டாய்லெட்' நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் தினமும் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி, முறையாக பராமரித்து வந்ததால் பயணிகளின் சிரமங்கள் குறைந்தது.தற்போது, இந்த இ--டாய்லெட் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், அசுத்தமாகி பயனின்றி கிடக்கிறது. இதுகுறித்து நகராட்சிக்கு தெரிவித்தும் தீர்வு காணப்படவில்லை. எனவே, இந்த கழிப்பிடத்தை உரிய முறையில் பராமரிக்கவும், இலவசகழிப்பிடங்கள் கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி