மேலும் செய்திகள்
மின் இணைப்பு இல்லாததால் திறக்கப்படாத ரேஷன் கடை
25-Mar-2025
பந்தலுார்,; பந்தலுார் அருகே முக்கட்டி பகுதியில், வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. சோலாடி மற்றும் சூசம்பாடி பகுதியை சேர்ந்த மக்கள் அதிக அளவில், நுகர்வோராக உள்ள நிலையில், 3 கி.மீ., துாரம் நடந்து வந்து பொருட்கள் வாங்கி செல்ல வேண்டிய நிலை தொடர்ந்தது. இதனால், சோலாடி பகுதியில் ரேசன் கடை அமைக்க வலியுறுத்தப்பட்ட நிலையில், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ரேசன் கடை கட்டுவதற்கு, 18.78 லட்சம் ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியது.இந்நிலையில், கட்டடம் கட்ட இடம் இல்லாத நிலையில், கூடலுார் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் முகமது, தனக்கு சொந்தமான இடத்தில், 4- லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட, 5 சென்ட் நிலத்தை இலவசமாக வழங்கினார். அதில், ரேஷன் கடைக்கான கட்டடம் கட்டப்பட்ட நிலையில் கடந்த, 6-ம் தேதி ஊட்டியில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து, இலவசமாக நிலத்தை வழங்கிய நில உரிமையாளர் மற்றும் ரேஷன் கடை அமைக்க முயற்சி மேற்கொண்ட கிராம நிர்வாகிகளை பாராட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஊர் பிரமுகர் சிங்கராஜ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன் பேசுகையில், ''பொதுமக்கள் ஒத்துழைத்தால் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய ஏதுவாக அமையும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி சிறந்த உதாரணம்,'' என்றார். தொடர்ந்து, நிலம் வழங்கிய முகமது கவுரவிக்கப்பட்டார். கூட்டுறவு வங்கி மேலாளர் குஞ்சுமுகமது உட்பட பலர் பங்கேற்றனர். ராஜேஷ் நன்றி கூறினார்.
25-Mar-2025