உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆடம்ஸ் நீரூற்றின் அமைப்பை மாற்ற கூடாது; நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

ஆடம்ஸ் நீரூற்றின் அமைப்பை மாற்ற கூடாது; நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

ஊட்டி; ஊட்டி நகர மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். கமிஷனர் ஸ்டேன்லி பாபு, துணை தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர்கள் பேசிய விவரம்:-

துணைத் தலைவர் ரவிக் குமார்: குடியிருப்புகள் கட்டுவதற்காக, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோர விண்ணப்பித்த பல்லாயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. அதில், ஊட்டி நகராட்சிக்கு உட்பட பகுதிகளை சேர்ந்தவர்களின், 70 மனுக்களும் அடங்கும். விண்ணப்பங்களுக்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.ஜார்ஜ்: ஊட்டி நகராட்சியில் உள்ள பழுதடைந்த வாகனங்களை சீரமைக்க நிதி வேண்டும் எனக்கூறி, மாதம் தோறும் பல லட்சம் ரூபாய் கோரி, தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதில், முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதால், பழைய வாகனங்களை ஏலம் விட்டு புதிய வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.முஸ்தபா: ரோஜா பூங்கா பகுதியில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண குழாய்கள் மாற்றும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஆடம்ஸ் நீரூற்று, காந்தி சிலை போன்றவைகளை மாற்றி அமைக்கவோ அல்லது அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதை மாவட்ட நிர்வாகம் தவிர்க்க வேண்டும். தம்பி இஸ்மாயில்: காந்தள் பகுதியில் நிலுவையில் உள்ள வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டும். அபுதாகீர்: கர்நாடகா பூங்காவிற்கு வரி விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீதா: ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர்களுக்கு அனைத்து பணப்பலன்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரஜினிகாந்த்: உழவர்சந்தை அருகேயுள்ள கோடப்பமந்து கால்வாய் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என்றார்.தொடர்ந்து, பல கவுன்சிலர்கள் அடிப்படை பணிகளை விரைவு படுத்த வலியுறுத்தினர். மேலும், ஆடம்ஸ் நீரூற்று அமைப்பை மாற்றி அமைக்க, நெடுஞ்சாலைத்துறை எடுத்த நடவடிக்கைக்கு காங்., உட்பட சில கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை