உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பார்வையாளர்களை கவர்ந்த மாணவியரின் நடனம்

பார்வையாளர்களை கவர்ந்த மாணவியரின் நடனம்

குன்னுா : குன்னுாரில் நடந்த நவ துர்கா நாட்டிய நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், கேரளா சேவா சங்கம் சார்பில் நடந்த முத்துபல்லக்கு திருவிழாவில், அருவங்காடு நாட்டிய பள்ளி மாணவியரின் நவ துர்கா பரதநாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.அதில், பரதநாட்டிய குரு மேகன கவுட் தலைமையில், மாணவி துர்கா மதுரை மீனாட்சி அம்மன், தனுஸ்ரீ சாமுண்டீஸ்வரி, தீக் ஷிதா மகிஷாசுரன், மிருது பரதநாட்டியம் ஆகிய வேடமணிந்து நாட்டியம் ஆடினர். தொடர்ந்து, மாணவி சுகமதி ராணி வேடத்தில் பரத நாட்டியமும், மாணவி பிரதிகாவின், கரகம், காவடி, பறை உள்ளிட்ட நாட்டு புற நடனம் அனைவரையும் கவர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை