உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பனிப்பொழிவில் மறைந்த சூரியன்

 பனிப்பொழிவில் மறைந்த சூரியன்

பந்தலூர்: பந்தலூர் பகுதியில் காலை நேரத்தில், கடும் பனிப்பொழிவு நிலவுவதால் சூரியன் மறைந்து காணப்படுகிறது. பந்தலூர் பகுதி கேரளா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், இங்கு குளிருக்கு பதில், இதமான காலநிலை நிலவும். சமீப காலமாக கோடை வெயிலின், தாக்கம் குறைந்து, மழைப்பொழிவு காணப்பட்டது. கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு, பகலில் குளிர், மாலையில் மேகமூட்டம் என, காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால், சூரியன் பனிப்பொழிவுக்கு மத்தியில் மறைந்து காணப்பட்டது. இந்த காட்சியை இந்த வழியாக வந்த சுற்றுலாப் பயணியர் வெகுவாக ரசித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை