மூதாட்டியை தாக்கி நகை பறித்த திருடன்
பந்தலுார் : பந்தலுார் அருகே கொளப்பள்ளி பகுதியில், மூதாட்டியை தாக்கி நகை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பந்தலுார் அருகே கொளப்பள்ளி ரூபிமைன்ஸ் பகுதியை சேர்ந்தவர் அங்கம்மாள்-,77. இந்த மூதாட்டியின் கணவர் இறந்து விட்ட நிலையில், வீட்டில் தனியாக குடியிருந்து வருகிறார்.நேற்று முன்தினம் மாலை, ஒரு துக்க வீட்டிற்கு சென்று வீடு திரும்பிய நிலையில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த ஒருவன், மூதாட்டி தலையில் தாக்கியுள்ளான். அதில் அங்கம்மாள் காயமடைந்து கீழே விழுந்துள்ளார்.அப்போது முதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த. 3 பவுன் தங்க செயினை, பறித்துக்கொண்டு ஓடியுள்ளான். அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து, காயமடைந்த மூதாட்டியை பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து தேவாலா டி.எஸ்.பி.,சரவணன், சப்--இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.